Pages

Wednesday, 16 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 173

I shall come on Palmyra Horse.
I shall wear garland made of flower AAVIRAI.
Then the bell will ring.
It is not shame for me but to her.
I shall proclaim what she had done for me.
The village will blame her.
I know the consequence and decided to proceed.
He, the hero intimates to her friend-maid.   

This is a poem compiled by KAANCHI-PULAVAN of Madurai village
2nd century B.C.E.

173. குறிஞ்சி

பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப,
''இன்னள் செய்தது இது'' என, முன் நின்று,
அவள் பழி நுவலும், இவ் ஊர்;
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே.

குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது.
மதுரைக் காஞ்சிப் புலவன் பாடல்

நூலில் கோத்த ஆவாரம்பூ மாலையைப் போட்டுக்கொண்டு, 
கறுக்கோடு இருக்கும் பனைமட்டையால் செய்த குதிரைமீது ஏறி, 
மணி ஓசை முழங்க, 
நாணம் இல்லாமல் 
“இவள் இன்னது செய்தாள்” என்று சொல்லிக்கொண்டு 
இவள் இருக்கும் ஊர் வழியே வருவேன். 
அப்போது ஊர் அவள்மீது பழி சொல்லும். 
இதனை உணர்ந்திருக்கிறேன். 
இப்படி வர இருக்கிறேன். – 
இவ்வாறு அவன் அவளது தோழியிடம் சொன்னான். 



No comments:

Post a Comment