My lungs are sighing endless deep breath as a leather air pumping bellow (image) in blacksmith factory that is only one in a village functioning for the peoples living in seven villages. (Let me not to be considered) I am considering his peacefulness leaving me alone in the evening when bats started searching trees with fruits.
This is a poem compiled by NAN-NAGAIYAR of Hachippedu village
2nd century B.C.E.
172. நெய்தல்
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர்கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே.
வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடல்
ஏழு ஊர் மக்களுக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் செய்து தரும் ஓர் ஊரில் உள்ள ஒரே ஒரு கொல்லன் மிதி-துருத்தி போல என் நெஞ்சு இடைவிடாது பெருமூச்சு வாங்குகிறது. காரணம் மென்மையான சிறகுகளை உடைய வௌவால் பழமுள்ள மரங்களை நாடிச் செல்லும் மாலைக் காலத்திலும் வராமல் எம்மைத் துறந்திருக்கும் அவர் இனிமையாக (மகிழ்வாக) இருக்கிறாரா என எண்ணுவதுதான்.

No comments:
Post a Comment