Pages

Wednesday, 16 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 170

Let anybody say anything. They do not know the intimation between us. His love will never abate. He is a Man of the hill where bathing elephant in falls will eat grass ERUVAI (Small Bulrush) (image) flown in water.

This is a poem compiled by KARUVUR KIZAR
2nd century B.C.E.

170. குறிஞ்சி

பலரும் கூறுக, அஃது அறியாதோரே-
அருவி தந்த நாட் குரல் எருவை (படம்)
கயம் நாடு யானை கவளம் மாந்தும்                      
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே, 

வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கருவூர் கிழார் பாடல்

அருவி அடித்துக் கொண்டுவந்த எருவை (கொறுக்காந்தட்டை, பைஞ்சாய்க் கோரை)யை நீராடும் யானை உணவாக்கிக்கொள்ளும் மலையை உடையவன் என் நாடன். யார் எதை வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். அவனோடு நான் கொண்டுள்ள நட்பு என்றுமே வீண்போகாது.



No comments:

Post a Comment