The heroine expresses her grievances.
Sir,
Let me my teeth flaw that smiled with you as an elephant has broken its tusk (image) by dashing a rock.
Let my life-soul that not having your mate putrefy as raw fish stored in canceled pot of a fisher-man.
This is a poem compiled by VELLI-VEETHIYAR, a female poet
2nd century B.C.E.
169. மருதம்
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய! மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே:
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி,
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது;
இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம்.
வெள்ளிவீதியார் பாடல்
ஐய,
காட்டில் செல்லும் யானை கல்லை முட்டிய தந்தம் (படம்) போல உன்னோடு சிரித்து மகிழ்ந்த என் பல உடைந்துபோகட்டும். உன்னையும் பெறாத என் உயிர் பாணர் தம் பானையில் பாதுகாக்கும் பச்சைமீன் போல அழுகி நாறட்டும். – தலைவி கூற்று.

No comments:
Post a Comment