Pages

Tuesday, 15 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 168

This is a monologue by the hero.
What am I doing? Am I hugging? Am I leaving her? I can not sure. But it is sure. If I leave her I could not live at all.
She is fragrant with tendering complexion as that of blossoming tree PITTIGAM at the early morning after a heavy rainfall.
It blossoms like an umbrella made of Palmyra leaves.    

This is a poem compiled by ANTHAIYAR of Siraikkudi village
2nd century B.C.E.

168. பாலை

மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே, நல் மா மேனி;
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.

பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது
சிறைக்குடி ஆந்தையார் பாடல்

‘அவளைப் பிரியக்கூடாது’ என்று அவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.
மாரிக்காலத்தில் பெருமழை பொழிந்த விடியற்காலத்தில் மரமல்லிகை மரம் பனங்குடை போல் பூத்திருப்பது போல் அவள் பூத்துக் கிடக்கிறாள். அந்த மல்லிகையின் குளுமை போன்றது அவளது மாநிற மேனி. தண்ணீர் மிதவை போன்றது சாய்திருக்கும் அவள் தோள். அதனை நான் தழுவிகிறேனா, விடுகிறேனா ஒன்றுமே விளங்கவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது. பிரிந்தால் வாழமாட்டேன்.



No comments:

Post a Comment