Village MAANTHAI is safe and good. Because the bird NAARAI (image) with white wings eats fish AIYIRAI enough to fill its stomach in the village at sea. Here we (you) are alone want of your love-mate.
This is a poem compiled by KUDALUR KIZAR
2nd century B.C.E.
166. நெய்தல்
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை;
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.
காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது.
கூடலூர் கிழார் பாடல்
மரந்தை ஊர் மிக நன்று. காரணம் அங்குக் கடலலை வந்து பெயர்வதால் வெண்மையான சிறகுகளை உடைய நாரை (படம்) அயிரை மீனை வயிறார உண்டு மகிழ்கிறது. நாமோ இங்குத் தனிமையில் காதல் பசியோடு வாடுகின்றோம். (தலைவி வாட்டத்தைத் தோழி தன்னோடு இணைத்துப் பேசுகிறாள்)
![]() |
| நாரை |

No comments:
Post a Comment