Pages

Tuesday, 15 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 165

You my Mind! You are appetite to enjoy her again and again as a drinker (image) demands to drink again and again. You are dissolving in the beauty of her hair as the salt in the open cart dissolving in rain water. (Hey! You are pity).

This is a poem compiled by PARANAR
2nd century B.C.E.

165. குறிஞ்சி

மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டாங்கு,              
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.

பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப்
பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.

பரணர் பாடல்

கள் உண்ட மகிழ்ச்சியில் மேலும் கள் உண்பது போல (படம்) 
அவளை நுகர்ந்த பின்னரும் மேலும் நுகர விரும்புகிறாய். 
நெஞ்சே! 
வண்டியில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள உப்பு 
மழையில் நனைந்து கரைவது போல 
நீ அவள் கூந்தல் அழகில் கரைகிறாய்.



No comments:

Post a Comment