Love-concubine says to friends of his (the hero) wife. I am in a position that his wife to sulk with him upon my relation with him. Let the waves of the river flowing on the eastern side of the village Kuntrur pulls me into its water.
The fish VAALAI (image) with horn jump up to get the mango fruit in the water of the above river.
(I am not responsible for his approach me. He fetched me as the mango fruit obtained by fish)
This is a poem compiled by MARUYHAN of Mangudi village
2nd century B.C.E.
164. மருதம்
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண் பெரும் பௌவம் அணங்குக தோழி!
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!
காதற் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.
மாங்குடிமருதன் பாடல்
அவர் மனைவி நிலைமை தெரியமல் அவரிடம் பிணக்கிக்கொள்ளும் அளவுக்கு நான் ஆளாகி இருக்கிறேன். இனி நான் வாழ்ந்து பயனில்லை. குன்றூருக்குக் கிழக்கிலுள்ள ஆற்றுநீர் அலை என்னை அடித்துச் செல்லட்டும்.
குன்றூர் காலம் காலமாக வேளிர் வாழும் ஊர். அதன் கிழக்கில் அலை மோதும் ஆறு. அதில் உள்ள பருமனான வளைவுடைய நிறைமாதப் பெண் வாளைமீன் (படம்) துள்ளிக் குதித்து அங்குப் பழுத்துத் தொங்கும் மாம்பழத்தைக் கௌவும். (தலைவன் தன் இல்லத்திலிருந்து தாவி என்னைக் கௌவிக்கொண்டான் என்கிறாள் காதல்-பரத்தை)

No comments:
Post a Comment