The sun sets. Rain is pouring continuously. Even the dreading-evils fear. My son wearing dollar made with tooth of a tiger on his neck hugs me in fear saying “Annaa” (mother). In such a painful time what was he (her lover) embracing? And now why he is waiting for me in the gate as a washed elephant by rain applying sandal mud in his chest? - The heroine speaks.
This is a poem compiled by NAKKEERAR
2nd century B.C.
161. குறிஞ்சி
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
''அன்னா!'' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன்கொல் தானே தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
நக்கீரர் பாடல்
பொழுது போய்விட்டது.
பேய்மழை விடாமல் பொழிகிறது.
புலிப்பல் மாட்டிய தாலி தொங்கும் மகன் “அன்னா” என்று தாயைத் தழுவிக்கொண்டு அலறுகிறான்.
புதல்வனின் தந்தை அன்று எதனைத் எதனைத் தழுவிக்கொண்டிருந்தானோ தெரியவில்லை,
இன்று மணக்கும் சந்தனம் மார்பில் அணிந்துகொண்டு மழையில் நனைந்த யானை போல வந்து வாயிலில் காத்திருக்கிறான்.

No comments:
Post a Comment