You, flower MULLAI! It seems that you are laughing at me. It is not good behavior. It is not the proper time to laugh at. I am being alone.
It is raining season. The land is wet in everywhere. It is evening time when the cows are returning home. (He is not returning home) – The solitary wailing of the lady.
This is a poem compiled by PAVUTTIRAN of Karuvur village
2nd century B.C.
162. முல்லை
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
முல்லை! வாழியோ, முல்லை! நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று இது தமியோர் மாட்டே?
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பனாய் உரைத்தது.
கருவூர்ப் பவுத்திரன் பாடல்
கார் காலம்.
நீரோட்டமான நிலம்.
பசுவினம் இல்லம் நோக்கித் திரும்பும் மாலைக்காலம்.
முல்லைப் பூவே!
நீ மொட்டு மலர்ந்து விரிகிறாய்.
தனியாக இருக்கும் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாயா?
இது தகுமா?

No comments:
Post a Comment