Pages

Saturday, 12 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 156

The hero of clandestine love asks his Paarppan fried.
You young Paarppan! Is there any medical treatment in your Veda literature to unit parted lovers?
Paarppan will have prayer article thandu in one hand.
It was made of an inner wood MURUKKU after removing the fiber-part of its skin.
He will dangle a prayer article kamandalam in his other hand.
He learned Vadas in Sanskrit, the prayer hymen from his ancestor’s voice.    

This is a poem compiled by PANDIYAN ENATHI NEDUNKANNAN
2nd century B.C.

156. குறிஞ்சி

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.

கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடல்

தலைவன் தன் பார்ப்பனத் தோழனைக் கேட்கிறான்
  • பார்ப்பன மகனே
  • எழுதாமல் வாய்வழியாகவே கேட்டுக் கேட்டுக் கற்ற உன் வேதத்தில் இணங்காமல் பிரிந்திருக்கும் காதலர்களைச் சேர்த்துவைக்கும் மருந்து ஏதேனும் சொல்லப்பட்டிருக்குறதா? இருந்தால் சொல்.
  • ஒரு வேளை நான் கொண்டிருப்பது மனமயக்கமா? 

  • பார்ப்பன மகன் தன் கையில் தண்டு வைத்திருப்பான்.
  • அது முருக்க மரத்துப் பட்டைநரை நீக்கி உள்ளே இருக்கும் தண்டுக் கட்டையால் செய்யப்பட்டது.
  • கமண்டலத்தைக் கையில் தொங்கவிட்டுக் கொண்டிருப்பான்.
  • அவன் கற்றிருப்பது வேதம்.
  • அந்த வேதம் எழுதப்படாத்து.
  • பிறர் வாயிலிருந்து கேட்டுப் பயின்று கற்றது.
  • ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்ணும் படிவ-நோன்பு கொண்டிருப்பவன்.





No comments:

Post a Comment