Pages

Saturday, 12 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 157

Lovers are hugging.
The cock is crowing ‘kukuu’. (Image)
My heart beats ‘thuk’.
It is morning.
It is a sword that separates the hugging lovers.
The wife is wincing.

This is a poem compiled by NANMULLAIYAR of Allur village
2nd century B.C.

157. மருதம்

''குக்கூ'' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது.
அள்ளூர் நன்முல்லையார் பாடல்

குக்கூ – இது கோழியின் குரல்.(படம்)
துட்க் – இது என் செஞ்சின் குரல்
இது விடியலைக் காட்டிற்று.
விடியல் ஒரு வாள்.

இது தழுவிக்கிடக்கும் காதலரைப் பிரித்துவிடும்.

''குக்கூ'' என்று சேவல் கோழி கூவிற்று.
அதன் எதிரொலியாக என் நெஞ்சம் "துட்கு" என்று அடைத்துக்கொண்டது
தழுவிக் கிடக்கும் காதலரைப் பிரிக்க வைகறைப் பொழுது வந்துவிட்டது என்று என் நெஞ்சம் "துட்கு" என்று அடைத்துக்கொண்டது

தலைவி பதற்றம்



No comments:

Post a Comment