Pages

Friday, 11 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 151

(He wants to earn money in distant place leaving his lover alone at her home).
He speaks himself.
It is an end to my youth-hood.
I have to cross the ways where the female bird VANGA, (woodpecker) (image) cries again and again to call for its male in doubt that it would have been eaten by a bird EZAAL, a kind of kite.     

This is a poem compiled by TUNGAL-ORI
2nd century B.C.

151. பாலை

வங்காக் கடந்த செங் கால் பேடை
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது,
குழல் இசைக் குரல குறும் பல அகவும்
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது,
''மறப்பு அருங் காதலி ஒழிய
இறப்பல்'' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே.

பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
தூங்கலோரி பாடல்

ஆண் வங்காப் பறவையை (மரங்கொத்திப் பறவை) (படம்) எழால் பருந்து பிடித்துத் தின்றுவிட்டது எனப் பெண் வங்காப் பறவை தன் கணவனைக் காணாது தன் குழல் போன்ற குரலை எழுப்பி மெல்ல மெல்ல அகவி அழைக்கும் குன்றுகள் பலவற்றில் உள்ள சிறிய கடினமான வழிகளில் சென்று பொருளீட்ட நினைப்பது என்பது இளமைக்கு ஒரு முடிவுகாலம் ஆகும்.

மறக்க முடியாத காதலியை இங்கேயே விட்டுவிட்டுச் செல்வது இளமைக்கு முடிவுகாலம். 


No comments:

Post a Comment