Pages

Friday, 11 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 150

Love thought is sick. But love hug becomes sweet. Both are love. Then why this disparity falls? You, my friend! Explain.   
He is Hill-Man.
The beacons (image) flaming on raised platform in corn-field in mountain slope resemble the stars in the shy. He is a man of such mountain.

This is a poem compiled by MADALUR KIZAR
2nd century B.C.

150. குறிஞ்சி

சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி (படம்)
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;                                                                     
புல்லின், மாய்வது எவன்கொல்? அன்னாய்!

இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது.

மாடலூர் கிழார் பாடல்

மலைநாடன் இல்லாதபோது அவனை நினைத்தால் உள்ளம் நோயால் வருந்துகிறது. சந்தனம் பூசிய அவன் மார்பைத் தழுவும்போது மட்டும் அது காணாமல் போகிறது. அன்னாய்! அது ஏன்?
அவன் மலைநாடன்.

வயல் பந்தலில் சேணோன் புகைவிட்டு எரியும் பந்தத்தை மாட்டி வைத்திருப்பான். மலையில் ஆங்காங்கே எரியும் இவை வானில் உள்ள விண்மீன்கள் போலத் தோற்றமளிக்கும். இத்தகைய மலைநாடன் அவன். 

ஞெகிழி

No comments:

Post a Comment