The lover says to her friend-maid.
He parted me alone.
I have to safe gourd myself as young tortoise emerge itself from egg being left by its mother. (Image)
I have to find out ways and means to join with him.
This is a poem compiled by KILLIMANGALAM KIZAR
2nd century B.C.
152. குறிஞ்சி
யாவதும் அறிகிலர், கழறுவோரே-
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே?
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விடினே,
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள்,
''நீ ஆற்றுகின்றிலை'' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது.
கிள்ளிமங்கலங் கிழார்
(ஆமை மணலில் முட்டையிட்டுப் புதைத்துவிட்டு ஓடிவிடும். வெயிலின் வெப்பத்தால் காலத்தில் முட்டை பொரிந்து குஞ்சுகள் வெளிவந்து தாமே கடலுக்குள் ஓடிப் பிழைத்துக்கொள்ளும்.) (படம்)
தன் காதலன் கைவிட்டுப் பிரிந்ததனால் கலங்கும் காதலி தான் தாய் இல்லாத ஆமை முட்டை போலத் தானேதான் தன் கவலையைப் போக்கிக்கொள்ளவேண்டும் என்று தன் தோழியிடம் கூறுகிறாள்.

No comments:
Post a Comment