Pages

Thursday 10 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 148

Flower KONTRAI is budding along with flower HURUNTHU in real. You say this is not rainy season. Say! Are we dreaming?
Flower KONTRAI resembles ringing mouth of the leg ornament (KINKINI) made of gold (image KOLUSU made of silver) worn by rich children.
This is a poem compiled by ILANKEERANTHAIYAR
2nd century B.C.

148. முல்லை

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை                    
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும்,
''கார் அன்று'' என்றிஆயின்,
கனவோ மற்று இது? வினவுவல் யானே.

பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறுத்த,
தலைமகள் சொல்லியது.

இளங்கீரந்தையார் பாடல்

கிண்கிணி (படம்) தவளை வாய் போல ஒலிக்கும் காலணி. 
பொன்னாலான இதனைச் செல்வச் சிறுவர் சிறுமியர் தம் கால்களில் அணிந்திருப்பர். 
இந்த அணிகலன் போலக் கொன்றையானது பூ விட்டு குருந்தம் பூவோடு பூத்திருக்கிறது. 
இதனை நீ ‘கார்காலம் அன்று’ என்கிறாய். 
அப்படியாயின் நாம் காண்பது கனவா? என்று நான் கேட்கிறேன்.  

கிண்கிணி

No comments:

Post a Comment