Pages

Thursday 10 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 147

While she living alone without her love mate, she awakes from a dream (image) in which a beautiful girl is offered by marriage. She thinks the dream favorable to her future.
This is a poem compiled by KOPPERUNJOZAN a king
2nd century B.C.

147. பாலை

வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி கனவே!
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.

தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது.
கோப்பெருஞ்சோழன் பாடல்

வேனிலில் பூக்கும் கூர்மையான பாதிரி மலர் போல் மயிரழகு ததும்பும் மாந்தளிர் நிறப் பெண்ணொருத்தியைத் திருமணம் செய்து தருவது போன்ற கனவு (படம்) கண்டு எழுந்தாள், அவள். கனவே! துணைவரைப் பிரிந்து வாழும் ஒருத்தி இது போன்ற கனவு கண்டால் எளனமாக எண்ணமாட்டார்கள். (நல்லதுதான்)

கனவு

No comments:

Post a Comment