Pages

Thursday, 10 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 146

Glad news about the marriage is shared between the lady and her friend-maid.
There are peoples in the village to make the lovers unite by marriage.
Good old men with walking stick in hand and turban on white-hair-head (image) met together in our house and said “O.K., O.K.” during betrothal.
This is a poem compiled by VELLI VEETHIYAR a female poet
2nd century B.C.

146. குறிஞ்சி

அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
''நன்று நன்று'' என்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.

தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி,
''வரைவு மறுப்பவோ?'' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.

வெள்ளிவீதியார் பாடல்

தண்டு = உன்றுகோல்
சிதவல் = தலைப்பாகை (படம்)

தண்டு ஊன்றிய கையும் நரைத்த தலையில் தலைப்பாகையும் கொண்டிருக்கும் முதியவர்கள் அவையாக ஒன்றுகூடி (மணம் பேசும்போது) “நன்று நன்று, இன்று பெரிதும் நல்ல நாள்” எனக் கூறுகின்றனர். நம் ஊரில் பிரிந்தவர்களை ஒன்றுசேர்த்து வைக்கும் மக்களும் இருக்கிறார்கள் போல் இருக்கிறது.

சிதவல்

No comments:

Post a Comment