As per me this village is not suitable to live in. I am suffering from thought upon him. This village does not care me at all. At least it does not ask me what happened. It is sleeping all the dead-night. (Image)
This is a poem compiled by KOLLAN AZISI
2nd century B.C.
145. குறிஞ்சி
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள் (படம்)
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.
வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கொல்லன் அழிசி பாடல்
இந்த ஊர் தூங்கும் மக்களுக்குத் துணைபோகும் இரவினை உடையது. கடற்கானல் சேற்று-நிலத்தவன் பிரிந்து கொடுமைப் படுத்துவதை எண்ணித் தாங்கமுடியாத துயரமோடு இருக்கும் எனக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டுத் துணையாக அமையவில்லை. எனவே இப்படி எனக்குத் துணை இல்லாத மக்களைக் கொண்ட இந்தச் சிறுகுடி நான் வாழ்வதற்கு ஏற்ற ஊர் அன்று. (சேர்ப்பன் ஊரே ஏற்றது)
![]() |
| பானாள் |

No comments:
Post a Comment