Pages

Thursday, 10 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 144

காவி
Here are her play-mates gathering KAVI, the water lily flowers. (Image) They are playing in the white waves of the sea. There is no my daughter. Alas! She would be walking on the stone-bits (image) upon the rock mountain among the crawling cloud (along with her lover).
This is a poem compiled by KODANGOTRAN, a teacher in Madurai village
2nd century B.C.
144. பாலை

கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,
இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே!

பரல்
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன் பாடல்

தோழிமார் கழியிலுள்ள காவி மலர்களைப் (படம்) பறித்து விளையாடுகின்றனர். வெண்ணிற அலை வீசும் கடலில் விளையாடுகின்றனர். பிரியாமல் கூடி விளையாடுகின்றனர். இங்கே என் மகள் இல்லை. அங்கே மழைமேகம் தவழும் உயர்ந்த மலைக்காட்டில் கல்லுப் பரல்கள் (படம்) உருத்த சென்றிருக்கிறாள். அந்தோ என்ன செய்வேன்!

No comments:

Post a Comment