Pages

Thursday, 10 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 142


She flocked the flowers in falls-pond.
She made leaves-dress and worn.
She was guarding the yield from parrot catching.
She dared her tending sight upon me.
She bound me with her eyes.
I am sighing as an elephant lying. (Image)
Still she bound my mind with her.
I don’t know whether she would realize or not.
This is a poem compiled by KAPILAR
2nd century B.C.



142. குறிஞ்சி

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது;

தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம்

கபிலர் பாடல்

அவள்
சுனையில் பூத்திருக்கும் மலர்களைப் பறித்தாள்.
(நனைந்த உடல்)
தழையாடையாகப் புனைந்து உடுத்திக்கொண்டாள்.
புனத்தில் மேயவரும் கிளிகளை ஓட்டினாள்.
(நான் சென்றபோது) தன் அழகிய கண்களால் பூப் போன்ற பார்வையைப் பாய்ச்சினாள்.

படுத்துக்கொண்டிருக்கும் யானை (படம்) போல் நான் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன். இதற்குக் காரணம் என் உள்ளத்தை அவள் தன்னோடு கட்டிப்போட்டு வைத்துக்கொண்டிருக்கிறாள். இதனை அவள் அறிவாளோ, மாட்டாளோ?


No comments:

Post a Comment