Pages

Wednesday, 9 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 141

The lady lover says to her friend-maid.
“Mother said that the millet yield is being stolen by parrots. Go to field and gourd the yield” – you say this information. Your intention is he (my lover) should not come to meet me in night time. Because, there will be male tiger wounded by elephant is trying toseize the meat from dholes eating. Please consider whether your decision is correct.

This is a poem compiled by PERUNKOLLAN of Madurai village
2nd century B.C.

141. குறிஞ்சி

வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க என்றோளே, அன்னை'' என, நீ
சொல்லின் எவனோ? தோழி! ''கொல்லை
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இருள் நடு நாள் வருதி;
சாரல் நாட, வாரலோ'' எனவே.

இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு
வரும் ஏதம் அஞ்சி,
பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான்
அதுவும் மறுத்து,

சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மதுரைப் பெருங்கொல்லன் பாடல்

நெடுங்கை வன்மான் = நீண்ட கையை உடைய யானை \ குறுங்கை இரும்புலி = குட்டையான முன்னங்கால்களைக் கையாகப் பயன்படுத்தும் புலி


அவள் தன் தோழியிடம் சொல்கிறாள். 
“கிளியினம் விளைந்த தினைக் கதிர்களைக் கவர்ந்து செல்கின்றன. 
தாய் தினைப்புனம் காக்கச் செல்க என்றாள். 
செல்லலாம்” என்கிறாய். 
யானையிடம் அடிபட்ட புலி இரையைச் 
செந்நாய் பிடுங்கிக்கொள்ள முயலும் காட்டில் 
அவர் நள்ளிரவில் வருவதற்கு அஞ்சி இவ்வாறு சொல்கிறாய். சரிதானா என எண்ணிப் பார்.

No comments:

Post a Comment