Pages

Wednesday, 9 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 140

The sound of a lizard in house will be taken as intimate relative thinking of the resident hearing. In such a way the passer in the forest will take the sound of a chameleon (image) will take as some of his intimate person is thinking him.
The lady lover satisfy herself and says to her friend-maid he (her lover) would hear the chameleon’s sound and would think of her in his way proceeding and return immediately.

This is a poem compiled by NAN-MULLAIYAR of Allur village.
2nd century B.C.

140. பாலை

வேதின வெரிநின் ஓதி முது போத்து,
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும்
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே?

பொருள்வயிற் பிரிந்த இடத்து, ''நீ ஆற்றுகின்றிலை'' என்ற தோழிக்குத்
தலைமகள் சொல்லியது.
அள்ளூர் நன்முல்லையார். பாடல்

வேதின = நிறம் மாறக்கூடிய * 
வெரிந் = முதுகு * 
ஓதி = பச்சோந்தி
போத்து = ஆண் * 
எவ்வம் = துன்பம் * 
புள் = சகுனம்

வீட்டில் இருப்போர் வீட்டுப்பல்லி ஒலியை 
யாரோ வேண்டியவர் நினைக்கும் சகுனமாக எடுத்துக்கொள்வர். 
அதுபோலக் காட்டில் செல்வோர் 
காட்டுப் பச்சோந்தி (படம்) 
ஒலியைக் கேட்டால் 
பிறர் தன்னை நினைக்கும் சகுனமாக எண்ணுவர். 
காட்டில் செல்லும் அவர் அங்குப் பச்சோந்தி ஒலியைக் கேட்டால் 
தன்னை (தலைவியை, அவரது காதலியை) நினைப்பதாகக் கருதுவார் 
என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.


No comments:

Post a Comment