A domestic hen bird is eating prey with its baby chicken (image) at the outside. There comes a wild cat (searching prey). It is evening. Mother bird calls its young ones for safe gourd. Mother and young ones raise their voice roaming around.
Raising voice as above the village peoples are murmuring story of the lovers.
Sir, please do not come to my street allowing such kind of murmuring.
The friend-maid requests her lady’s lover.
This is a poem compiled by MAASAATHYAR of Okkur village
2nd century B.C.
139. மருதம்
மனை உறை கோழி குறுங் கால் பேடை,
வேலி வெருகினம் மாலை உற்றென,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல், வாழியர்! ஐய! எம் தெருவே.
வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது
ஒக்கூர் மாசாத்தியார்.
அவன் அவள் காதல் உறவு பற்றி
ஊரார் பேசிக்கொள்கிறார்கள்.
அது அம்பல்.
இந்தப் பேச்சொலி எப்படி இருக்கிறது?
வீட்டில் வாழும் குட்டிக்கால் பெட்டைக்கோழி
தன் குஞ்சுகளுடன் மேய்ந்துகொண்டிருந்தது. (படம்)
மாலை நேரத்தில் வேலிப்பூனை அங்கு வந்தது.
(பூனை கோழிக் குஞ்சைத் தின்னும்)
கோழி பதுங்கும் இடம் தெரியாமல் தன் குஞ்சுகளை அழைத்தது.
அவை கியா கியா எனக் கத்திக்கொண்டே
தாயைச் சுற்றி அங்கும் இங்கும் ஓடின.
தாய்க்கோழியின் கொக் கொக் என்னும் ஒலி,
குஞ்சுகளின் கியா கியா என்னும் ஒலி
எல்லாம் கலந்து கேட்பது போல்
ஊர்மக்கள் அலர் தூற்றும் ஒலை இருக்கிறது.
ஐய!
இப்படி அலர் தூற்றும்படி எம் தெருப் பக்கம் வரவேண்டாம்.

No comments:
Post a Comment