The village slept.
We are waiting for your indication of sound music from the flower NOCHI, (image) which has leaves like peacock foot in the bush apart from our seventh house.
He is waiting for her.
Her friend-maid says these words to her lady so as he hears.
This is a poem compiled by AZISI a blacksmith
2nd century B.C.
138. குறிஞ்சி
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.
குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி,
தோழி சிறைப்புறமாகக் கூறியது;
இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம்
கொல்லன் அழிசி பாடல்
ஊர் சும்மாத் தூங்கினாலும் நாங்கள் தூங்குவது இல்லை.
எம் வீட்டிலிருந்து ஏழு வீடு தாண்டி
மயிலின் காலடி போல் இலை கொண்ட
நொச்சிக் கொம்பில் உள்ள பூ (படம்)
ஓசை
(அவன் வந்து மோத அசையும் ஓசை)
கேட்காதா
என்று உற்றுக் கேட்டுக்கொண்டே இருந்தோம்.
![]() |
| நொச்சி |

No comments:
Post a Comment