Pages

Wednesday, 9 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 137

Assurance to girl friend
I never part you ever.
It is temporary.
I am going to earn money to share it to poor.
It is my aim.
If I part you let my aim be destroyed.  

This is a poem compiled by
PERUNGADUNGO, who compiled poems on parting-love
2nd century B.C.

137. பாலை

மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நிற் துறந்து அமைகுவென் ஆயின் எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக! யான் செலவுறு தகவே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்

நான் பொருள் தேடச் செல்கிறேன். 
நீ புலம்பும்படி உன்னை விட்டுப் பிரிந்து அங்கேயே இருந்துவிட மாட்டேன். 
"இரவலர் பலர் என்னை நாடி வரவேண்டும். 
அவர்களுக்கு நான் வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். 
அதற்காகத்தான் பொருளீட்டச் செல்கிறேன்" 
உன்னைப் பிரிந்திருப்பேன் ஆயின் 
என்னிடம் இரவலர் வாராதிருக்கும் நாள் பலவாகட்டும்.


No comments:

Post a Comment