Lust! Lust! We say.
It is neither a damsel hug nor sick.
It is a minute instinct.
It will neither heat us nor diminish from us.
You can see elephant eats leaves. (Image) You cannot see how it becomes mad.
That is the way the history of lust.
This is a poem compiled by MILAI-PERUNKANDAN
2nd century B.C.
136. குறிஞ்சி
''காமம் காமம்'' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது
மிளைப்பெருங் கந்தன் பாடல்
காமம் காமம் என்று சொல்கிறார்களே.
அது பிடித்துக்கொண்டு வருத்தும் பேயோ, நோயோ அன்று.
அது நுட்பமானது.
அது கடுப்பேற்றாது, (சுடாது),
ஆறவும் ஆறாது.
யானை தழைகளை மென்று (படம்)
மதம் கொள்வது போன்ற பாணி அதற்கு உண்டு.
இதனை, அதனைக் கொண்டவர் காணலாம்.

No comments:
Post a Comment