You! My Lady! Do not cry. He does not leave us alone. Because, that is he conveyed us “Man’s life rests on duty of earning while woman’s life rests on him (her husband)”
This is a poem compiled by PERUNGADUNGO,
a poet sung poems prominently on separation-love.
2nd century B.C.
135. பாலை
''வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'' என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே.
''தலைமகன் பிரியும்'' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல்
தோழி!
அழவேண்டாம்.
அவர் உன்னை விட்டுப் பிரிந்து செல்லமாட்டார்.
காரணம்,
அவர்தானே சொன்னார்.
பொருளீட்டும் வினைதான் ஆண்களுக்கு உயிர்.
பெண்களுக்கோ அவர்களது கணவனே உயிர்
– இப்படிச் சொன்னவர் ஆயிற்றே.
ஒப்புநோக்குக - நற்றிணை 24

No comments:
Post a Comment