Pages

Tuesday, 8 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 132

He says to his friend about his lover. (His fried belittles his hero’s love. To him the hero explains) she is expert in hugging techno. She allures with her beauty of heaping breast and longing hair tendering complexion as that of mango tender leaf. How shall I forget her? My mind is beating to enjoy her as a calf expecting its mother cow to drink milk. (Image)   

This is a poem compiled by AANTHAIYAR of Siraikkudi village
2nd century B.C.

132. குறிஞ்சி

கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே? ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள் மாஅ யோளே,

கழற்றெதிர்மறை
சிறைக்குடி ஆந்தையார் பாடல்

இறுக்கித் தழுவத் தழுவ விடாதவள்
ஈடில்லா அழகு கொண்டவள். 
குவிந்த மென்மையான முலை  கொண்டவள். 
கொடி போன்று நீளும் கூந்தல் கொண்டவள். 
இத்தனையும் கொண்ட அவளை எப்படி மறப்பேன். 
மிகுதியாகப் பால் சுரக்கும் தாயைக் காணும் விருப்போடு 
பசுவின் கன்று (படம்) ஏங்குவது போன்று 
மாந்தளிர் போன்ற மேனி அழகினை உடைய அவளுக்காக ஏங்குகிறேன், 
என்கிறான் அவளது காதலன் தன் தோழனிடம். 


No comments:

Post a Comment