Her shoulder likes bending bamboo. Her eyes attack me liking. But alas she is far away yet reach. You, my mind! You are beating me to get her immediately as a farmer having single plough (image) hastens to seed his vast area of land during a rare rain-fall season.
This is a poem compiled by ORER UZAVANAR
A farmer having single plough
His name has been derived from the phrase used in this poem
2nd century B.C.
131.பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே,
வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது
ஓரேருழவனார் பாடல்
அவள் ஆடும் மூங்கில் போன்ற தோளை உடையவள்.
என்னைப் பெரிதும் விரும்பும் கண்ணை உடையவள்.
அவள் இருக்கும் ஊரோ நெடுந்தொலைவில் இருக்கிறது.
நெஞ்சே!
அவளை உடனே அடையவேண்டும் என்கிறாய்.
மிகுதியான நிலம் கொண்ட ஒரே ஒரு கலப்பையை உடைய உழவன்
மழை ஈரம் பட்ட பருவத்தில்
துடிப்பது போலத் துடிக்கிறாய்.
(என்ன செய்வேன்)

No comments:
Post a Comment