Pages

Tuesday, 8 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 130

He, my lover did not hide in an under-ground, (Image) fly in sky nor go on voyage in ship. I searched him country wise, village wise, house wise. I could not see him anywhere. Anything may happened by others.  

This is a poem compiled by VELLI-VEETHIYAR, a female poet.
2nd century B.C.

130. பாலை

நிலம் தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ? நம் காதலோரே.

பிரிவிடை அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
''நீ அவர் பிரிந்தார் என்று ஆற்றாயாகின்றது என்னை?
யான் அவர் உள்வழி அறிந்து தூது விட்டுக்கொணர்வேன்;
நின் ஆற்றாமை நீங்குக!''
எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.
தோழி தூது விடுவாளாகத்
தலைமகள் தனது ஆற்றாமையால் கூறியதூஉம் ஆம்
வெள்ளி வீதியார் பாடல்

அவர் நிலத்தைத் தோண்டிப் புதைந்துகொள்ளவில்லை. (படம்) 
வானத்தில் பறந்து செல்லவில்லை. 
தரையைப் பிரிக்கும் கடலில் கப்பலில் செல்லவில்லை. 
நாடு நாடாக, ஊர் ஊராக, வீடு வீடாகத் தேடிப் பார்த்தேன். 
அவருக்கு என்ன நேர்ந்தது? 
யாராவது அவரை மறைத்து வைத்துக் கொண்டார்களோ? 
(பரத்தை அவரை மறைத்து வைத்துக்கொண்டிருக்கிறாள்.) 

நிலம் தொட்டுப் புகாஅர்

1 comment:

  1. இரு முன்னீர் என்பது பெருங்கடல் என்றே பொருள்பட வேண்டும்.

    ReplyDelete