Hi! My friend, youngsters’ fried! Poets’ friend! Listen my words! She tied me by her eye-brow and hair those resemble as moon rising on eighth day at sea. (Image) As a new elephant tied to train, I being tied could not break her tie.
This is a poem compiled by KOPPERUNJOLAN, a Chola king.
First century B.C.
129. குறிஞ்சி
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை;
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது
கோப்பெருஞ்சோழன் பாடல்
எலுவ (‘ஏ’ என்பதன் அண்மை விளி)!
சிறுவர்களைப் பேணும் நண்பனே!
புலவர்களின் தோழனே!
இந்தக் கதையைக் கேள்.
கடலுக்கு நடுவே எட்டுநாள் வளர்ந்த நிலா (படம்)
தோன்றுவது போல
அவள் கூந்தலும் நெற்றியும் ஒளிர்ந்து,
அது
புதிதாகப் பிடித்த யானையைப்
பழக்குவதற்குக் கட்டிப்போடுவது போல
என்னைக் கட்டி வைத்துள்ளது.
(என்னால் விடுபட இயலவில்லை)

No comments:
Post a Comment