She moans with her friend-maid. He consumed my virginal beauty. Even after, I am living.
How?
A millet plant (image – millet plant with yield) stands apart growing new leaves at its side by rain, after the parrot cut off its yield.
This is a poem compiled by MUDUKANNAN SATHAN of Uraiyur village
2nd century B.C.
133. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும் உளெனே தோழி! என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது
உறையூர் முதுகண்ணன் சாத்தன் பாடல்
அவர் என் பெண்மையின் புதிய நலத்தை உண்ட பின்னர்
தனிமைப்பட்டுக் கிடக்கிறேன்.
புனக்காட்டில் பொன்னிறத்தில் விளைந்திருந்த
தினைக்கதிரைக்
(படம் – கதிருடன் விளைந்திருக்கும் தினை)
கிளி கிள்ளிச் சென்று உண்ட பின்னர்
கதிரின்றி வெறுமனே நிற்கும் தினைத்தட்டையானது
பெருமழை பொழிந்து
தன் பக்கத்துக் கணுவில் இலை விட்டுத் தளிர்ப்பது போல
நான் தளிர்த்திருக்கிறேன்.
– இவ்வாறு அவள் தன் தோழியிடம் சொல்லிப் புலம்புகிறாள்.
![]() |
| தினைக் கதிர் |

No comments:
Post a Comment