Pages

Sunday, 6 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 125

I was in the van during the leaf-dress-festival celebration. But at present my shoulder becomes leaned and the bangles are loose to fall. I am only living as a crane with its bygone strength in its wings waiting in a branch of a tree touching in water for it’s pray. My eyes are searching for his (lover) bestow meeting by favorable glance.
(Leaf-dress is dress made of leaves and flowers (image, modern period) to hide the upper vulva or female mons pubis) 
This is a poem compiled by AMMUVAN
2nd century B.C.

125.நெய்தல்

இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி தோழி! சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே,

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய்,
தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது
அம்மூவன்  பாடல்

மலை மகளிர் தம் அல்குலை மறைக்கத் தழையணி அணிவர் 
(படம், இக்காலத் தழையணி) 
அக் காலத்தில் தழையணி விழா கொண்டாடுவர். 
அந்த விழாவில் அழகுநலத்தால் மேம்பட்டு விளங்கிய என் சாயல் தோள்வளை நெகிழச் சாய்ந்து போன பின்னரும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 
அவன் (என் காதலன்) துறைவன். 
சிறகின் பழைய வலிமை குன்றிய பசுமைநிற நாரை பறக்கமுடியாமல் நீரலையில் மோதிக்கொண்டிருக்கும் கிளையில் (இரைக்காக) அமர்ந்துகொண்டிருக்கும் துறைவன் அவன். 
அந்த நாரை போல நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். 
காரணம் அவன் வருவான் என்னும் கண்ணோட்டம். 
அந்தக் கண்ணோட்டம் மாறாமல் இருக்கிறது. 

தழை அணி

No comments:

Post a Comment