Pages

Sunday, 6 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 123

It is a littoral land. Sand is shining like moon light. There is a park growing Punnai tree with black branches. The shadow under is filled with dark. (It is the meeting place I am waiting for him). My brothers’ catamarans (image) return back after fishing. But I could not catch him at my sight.      

This is a poem compiled by AIYUR MUDAVAN
(Meaning lame man, native of Aiyur village)
2nd century B.C.

123. நெய்தல்

இருள் திணிந்தன்ன ஈர்ந் தண் கொழு நிழல்,
நிலவுக் குவித்தன்ன வெண் மணல் ஒரு சிறை,
கருங் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப,
இன்னும் வாரார்; வரூஉம்,
பல் மீன் வேட்டத்து என்னையர் திமிலே, 

பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி,
அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து,
தலைமகட்குச் சொல்லியது
ஐயூர் முடவன் பாடல்

கருநிறக் கிளைகளை உடைய புன்னைமரப் பூஞ்சோலை. 
அங்கு இருளைத் திணித்து வைத்தாற் போன்ற குளுகுளுப்பான நல்ல நிழல்.
அதன் அருகில் நிலா வெளிச்சத்தைக் குவித்து வைத்தாற் போன்ற வெண்ணிற மணல். 
அதன் ஒரு பக்கம். 
(அங்கேதான் அவர் என்னை எடுத்துக்கொண்டார். ) 
(அங்குதான் இன்றும் அவர் வரவுக்காக நான் காத்திருக்கிறேன்) 
மீன் வேட்டைக்குச் சென்ற என் அண்ணன்மாரின் திமில்கள் வந்துவிட்டன. 
அவர் மட்டும் இன்னும் வரவில்லை.

திமில்

No comments:

Post a Comment