He missed the meeting point. It is like a male monkey of black face family (image) missed the target in its jump, cached a new branch and went away. Alas! On this miss-happening my shoulders fell in green-sick.
This is a poem compiled by KAPILAR
2nd century B.C.
121. குறிஞ்சி
மெய்யே? வாழி! தோழி சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை (படம்)
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என் தட மென் தோளே.
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனான் நிகழ்ந்து,
மற்று அவன் குறியை ஒத்தவழி,
அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று,
ஆண்டு அவனைக் காணாது
தலைமகள் மயங்கியவழிப்
பின்னர் அவன் வரவு உணர்த்திய தோழிக்குத்
தலைமகள் கூறியது
கபிலர்
மலைச்சாரலில் கருநிற முகம் கொண்ட முசு இன ஆண்குரங்கு சரியான குறியில் பாயாமல் தப்பியதால் கிடைத்த கிளையைப் பற்றிக்கொண்டு அதன் வழியே போவது போல நாடன் (காதலன்) நாம் குறித்த குறியிடத்தைத் தப்ப விட்டுவிட்டுப் போய்விட்டான்.
அதனை எண்ணி என் தோள் நிறம் மாறிப் பசலை நிறம் கொண்டது. (என் செய்யலாம்?)
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனான் நிகழ்ந்து,
மற்று அவன் குறியை ஒத்தவழி,
அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று,
ஆண்டு அவனைக் காணாது
தலைமகள் மயங்கியவழிப்
பின்னர் அவன் வரவு உணர்த்திய தோழிக்குத்
தலைமகள் கூறியது
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனான் நிகழ்ந்து,
மற்று அவன் குறியை ஒத்தவழி,
அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று,
ஆண்டு அவனைக் காணாது
தலைமகள் மயங்கியவழிப்
பின்னர் அவன் வரவு உணர்த்திய தோழிக்குத்
தலைமகள் கூறியது
![]() |
| மா முக முசுக்கலை |


No comments:
Post a Comment