You mind! (Image) Do you know you fell in love with good choice but it is difficult to succeed? It is like a poor man tends anxiously to enjoy the material world.
This is a poem compiled by PARANAR
2nd century B.C.
120. குறிஞ்சி
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால் நெஞ்சே! காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம்
பரணர் பாடல்
காதலி நல்லவள்தான்.
ஆனால் கிடைத்தற்கு அரியவள் என்பது உனக்குத் தெரியவில்லையே.
நெஞ்சே! உன் செயல் பணம் இல்லாதவன் அனுபவிக்க விரும்பியது போல் பயனற்றுப் போகிறதே.
![]() |
| நெஞ்சிற்குச் சொல்லியது |

No comments:
Post a Comment