Pages

Saturday, 5 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 117

Speaking bangles
Let him not come back suppose.
My losing bangles are speaking with me.
Crane bird looks like white water lily.
Being afraid of its look the crab enters in its mud-home at the root of KANDAL tree.
The waves are roaring as an ox that tied with rope by the keeper.    
This is a poem compiled by KUNTRIYANAR

117. நெய்தல்

மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது
குன்றியனார் பாடல்

ஆம்பல் அன்ன கொக்கு
துறைவன் வராமல் போனாலும் போகட்டும். 
என் கையில் வளையல்கள் உள்ளன. 
அவை கழன்று அவனைக் காட்டிக்கொண்டே இருக்கும்.

அண்டர் என்னும் இடையர் கயிற்றால் கட்டிப்போட்ட எருது கதறுவது போல அலை முழங்கும் துறை.
கொக்கின் பார்வைக்கு அஞ்சிய ஈரநில நண்டு கண்டல் மர வேரில் அமைத்துள்ள தன் வளைக்குள் செல்லும் துறை.
கொக்கு – மாரிக்காலத்தில் குளத்தில் பூக்கும் வெள்ளாம்பல் போல இருக்கும்.

வினைஞர் = சங்கறுக்கும் கலைஞர்

ஆம்பல் அன்ன கொக்கு

ஆம்பல் அன்ன கொக்கு



No comments:

Post a Comment