Pages

Saturday, 5 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 115

Hug her to remove sulking.
Friend-maid hands over her lady to the latter’s lover to elope with these advice.
She has no other relation except you.
Hence, remove her sulking when it appears.
She offers her is a small gift. If you extinguish her sulking is a noble gift.
You are a Man of a hill where mountain-sheep (Image) sleeps comfortably.  
This is a poem compiled by KAPILAR

115. குறிஞ்சி

பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட! நின் அலது இலளே.

உடன்போக்கு ஒருப்படுத்து மீளும் தோழி தலைமகற்குக் கூறியது
கபிலர்


மரையா என்னும் மலையாடுகள் இலைகளை உண்டபின் உறங்கும் மலைநாடனே! 
இனி இவளுக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. 
இவள் உன்னோடு புலவி (சிறுபிணக்கு) கொள்வாளாயின் அதனைப் போக்கி உன் அரவணைப்புக் கொடையை இவளுக்கு வழங்குவாயாக. 
இவள் உனக்குத் தந்தது தன்னைத் தந்த ஒரே ஒரு கொடைதான். 
நீ இவளுக்குத் தந்ததோ பெருங்கொடை. 
பெருங்கொடை நல்கின் பேணாதவரும் உலகில் உண்டோ. 
எனவே புலவி தீர அளிமதி. 

மரையா

No comments:

Post a Comment