Pages

Saturday, 5 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 114

Love mediator 
Letting her lay on NEYTHAL flower bed (image – a girl on flower bed) I came here as you said. I am departing. You can enjoy. Otherwise the crane bird shall play stepping on her.
This is a poem compiled by PONNAGAN

114. நெய்தல்

நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி,
நின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க!
செல்கம்; செல வியங்கொண்மோ அல்கலும்,
ஆரல் அருந்த வயிற்ற
நாரை மிதிக்கும், என் மகள் நுதலே,

இடத்துய்த்து நீங்கும் தோழி தலைமகற்குக் கூறியது
பொன்னாகன் பாடல்


தேரில் வந்த கொண்க 
(அவளை எடுத்துக்கொண்ட) நீ சொன்னபடி பாவைப்பெண்ணை நெய்தல் பூக்களைப் பரப்பிப் படுக்கவைத்துவிட்டு (படம் - பூவில் கிடக்கும் பாவை) வந்துள்ளேன். 
நான் விலகிச் செல்கிறேன். 
நீ செல்க. 
\இல்லாவிட்டால் நாரை அவள் நெற்றியை மிதித்து விளையாடும். 

நெய்தல் பரப்பில்
பாவையைப்
படுக்கவைத்துவிட்டுத்
தோழி தலைவனிடம்
வந்திருக்கிறாளாம்

No comments:

Post a Comment