Pages

Saturday, 5 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 113

Secret meeting place of lovers has been changed.
Friend-maid of her informed him. Yesterday you met her in a band bed. Tomorrow I shall go to river to fetch some sediment to apply to our hair to clean. She will also accompany with me. That place is near both the village and pond. Nobody will come to the place except crane birds to search for their pray. (Image) (You can meet her there conveniently tomorrow).  
This is a poem compiled by MAATHEERTHAN

113. மருதம்

ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே:
இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால், பொழிலே; யாம் எம்
கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்;
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.

பகற்குறி நேர்ந்த தலைமகற்குக்
குறிப்பினால் குறியிடம் பெயர்த்துச் சொல்லியது
மாதீர்த்தன் பாடல்


கூந்தலில் (உள்ள அழுக்குப் போகத் தேய்த்துக் குளிக்க) எருமணம் என்னும் மண் கொண்டுவருவதற்காக காட்டாற்றுப் பக்கம் போகிறேன். 
அது ஊருக்கும் பக்கம். 
நேற்று கூடிய பொய்கைக்கும் பக்கமான இடம். 
அங்கும் அவள் (அவனது காதலி) வருவாள். \
அங்குள்ள பொழிலில் இரை தேடுவதற்காக வரும் குருகு (படம்) அல்லது வேறு யாரும் வரமாட்டார்கள்.  

இரை தேர் வெண் குருகு

No comments:

Post a Comment