Pages

Friday, 4 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 112

If we afraid of murmuring by the village people about our love affairs we shall be suffering from the brim of lust fever. If I decide to quench lust feelings our modesty stands against. At mist, Alas, my beauty and feelings those took away from me is in a critical position as a fiber thread tree bent to its lost (image) by an elephant to eat (without broken nor stretching back)  
This is a poem compiled by AALATHUR KIZAR

112. குறிஞ்சி

கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே.

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஆலத்தூர் கிழார் பாடல்

ஊரார் பேசுகிறார்களே என்று அஞ்சினால் காம உணர்வைத் தாங்க முடியவில்லை. 
காமம் தீரச் செல்லலாம் என்றால் நாணம் தடுக்கிறது. 
இதனால் அவர் உண்டுவிட்ட என் அழகு யானை ஒடித்த நார்மரம் போல ஒடிந்தும் ஒடியாமலும் ஒட்டிக்கொண்டு தொங்குகிறது.

நாருடை ஒசியல்



No comments:

Post a Comment