Pages

Friday, 4 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 111

Her shoulder becomes leaned.
Her mother consulted with the fore-teller VELAN.
He said that MURUGAN fell on her.
This is the story the friend-maid conveyed to her lady along with her expressions.
Based on VELAN words, if mother celebrates (VETRY) home festival her lover would have immediately to watch the mockery dance.
He is a Man of hill region where single rock seems like an elephant stands hiding its trunk. (Image)  
This is a poem compiled by THEEN-MITHI-NAGAN

111. குறிஞ்சி

மென் தோள் நெகிழ்த்த செல்லல், வேலன்,
''வென்றி நெடு வேள்'' என்னும்; அன்னையும்,
அது என உணரும் ஆயின், ஆயிடைக்
கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன (படம்)
கேழ் இருந் துறுகல் கெழு மலை நாடன்
வல்லே வருக தோழி! நம்
இல்லோர் பெரு நகை காணிய சிறிதே!

வரைவு நீட்டித்தவழித் தலைமகள் வேறுபாடு கண்டு
வெறியெடுப்பக் கருதிய தாயது நிலைமை
தலைமகட்குச் சொல்லுவாளாய்,
தலைவன் சிறைப்புறமாகத் தோழி கூறியது.

தீன்மதிநாகன் பாடல்

என் தோள் மெலிந்துவிட்டது. இதற்குக் காரணம் என்ன என்று அன்னை குறி சொல்லும் வேலனைக் கேட்டாள். அவன் இவள் மேல் முருகன் ஏறியுள்ளான் என்றான். அன்னையும் அதனை நம்பி முருகனுக்கு வெறியாட்டு விழா எடுப்பாளாயின் இந்தச் சிறிப்புப் கூத்தைக் காண அவன் (அவளது காதலன்) உடனே வருவானாக.

கையை மறைத்து வைத்துக்கொண்டு குள்ளயானை இருப்பது போன்ற கருநிறக் குத்துப்பாறைகளைக் கொண்ட மலைநாடன் அவன். 

இது பிடி
இதன் கை
மறைந்திருப்பது
போல்
பெரிய பாறையாம்

No comments:

Post a Comment