North wind (winter wind in Tamil country) blows severely.
It quakes water lily blue in color.
It shakes KARUVILAI Clitoria_ternatea (image) flower that resembles the eye in peacock feather (image).
It slashes the beautiful red flower in thorn-leaf plant ENGAI.
It blows chill that quakes our body.
In such uncomfortable days he didn’t care about us.
Then, what is use if he comes or not after sometimes?
This is a poem compiled by KILLIMANGALAM KIZAR.
110. முல்லை
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ தோழி! நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது;
தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம்.
கிள்ளிமங்கலம் கிழார் பாஆடல்
வாடைக்காற்றானது,
நீரிலே பூத்திருக்கும் நீல மலரை உலுக்குகிறது.
புதரிலே மயில் தோகைக் கண் (படம்) போலப் பூத்திருக்கும் கருவிளைப் பூவை (படம்) உலுக்கி ஆட்டுகிறது.
கூர்மையான இலைமுள்ளோடு இருக்கும் ஈங்கைச் செடியில் செவ்வரும்பு விட்டு வண்ணம் வண்ணமாகப் பூத்திருக்கும் மலர்களை உதிரச் செய்கிறது.
இப்படியெல்லாம் கொடுமையாகத் தண்ணென்று வீசுகிறது.
இப்படிப்பட்ட வாடையில் அவள் என்ன ஆனாள் என்று அவர் கேட்க நினைக்காமல் இருக்கிறாரே. அப்படிப்படவர் இனி வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?
![]() |
| பீலி ஒண் பொறி போல் கருவிளை பூத்திருந்ததாம் |


No comments:
Post a Comment