Pages

Thursday, 3 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 109

Her forehead becomes fade in its complexion even during the period of her relation with her lover (for being away in sometime). He, her lover is a fisher man fishing ‘eral’ family. (Image)
This is a poem compiled by NAMBI KUTTUVAN

109. நெய்தல்

முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை
புணரி இகுதிரை தரூஉம் துறைவன்
புணரிய இருந்த ஞான்றும்,
இன்னது மன்னோ, நல் நுதற் கவினே!

தலைவன் சிறைப்புறமாக,
தலைவி வேறுபாடுகண்ட புறத்தார்
அலர் கூறுகின்றமை தோன்ற,
தோழி தலைமகட்குக் கூறுவாளாய்க் கூறியது
நம்பி குட்டுவன்

முள் இருக்கும் இறால்மீன் கூட்டத்தையே (படம்) பிடித்துக்கொண்டு வரும் கடல்-துறை மீனவன் அவன். 
அவன் அவளோடு தொடர்பு கொண்டு வாழும்போதே அவ்வப்போது பிரிகின்ற காரணத்தால் இவளது நெற்றி-அழகு குன்றிவிட்டதே.

முட் கால் இறவு

No comments:

Post a Comment