Cows are returning home to feed their calves. Flower MULLAI blossoms. These are the indications that this is evening. (He, her lover has not return yet). She feels that she could not alive any more.
This is a poem compiled by DEVAN, a gate-keeper.
108. முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல் தோழி! யானே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது
வாயிலான் தேவன் பாடல்
கறவைப் பசுக்கள் கன்றுகளை நோக்கி வருகின்றன.
முல்லை மலரத் தொடங்கிவிட்டது.
இவை மாலைநேரம் வந்ததன் அறிகுறிகள்.
அவர் இன்னும் வரவில்லை.
இனி உயிர்வாழ முடியாது போல் தோன்றுகிறது.
முல்லை மலரத் தொடங்கிவிட்டது.
இவை மாலைநேரம் வந்ததன் அறிகுறிகள்.
அவர் இன்னும் வரவில்லை.
இனி உயிர்வாழ முடியாது போல் தோன்றுகிறது.
![]() |
| கறவையும் கன்றும் |

No comments:
Post a Comment