She curses the cock (image) as it has disturbed her comfortable sleep with her husband by crowing in the early morning. She consecrates the cock let it be fed by her fostering domestic cat while it searching rat for pray.
The cock has red comb on its head that resembles a bunch of THONTRI flower.
This is a poem compiled by KANNANAR of Madurai village.
107. மருதம்
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்கு இரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி
காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது
மதுரைக் கண்ணனார் பாடல்
நள்ளிரவில் என் கணவனோடு நான் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தேன். அந்தத் தூக்கத்தைக் கெடுத்துக் கூவி எழுப்பிவிட்டாய். சேவலே! எலி இரைக்கு அலையும் வளர்ப்புப் பூனைக்கு நீ இரையாகக் கடவாய்.
இவ்வாறு சொல்லி அதிகாலையில் கூவிய சேவலை அவள் சபிக்கிறாள்.
தோன்றிப் பூ குவிந்த கொத்துகளைக் கொண்டிருக்கும். இந்தத் தோன்றிப் பூ போலக் கொண்டை கொண்டது கோழிச்சேவல்.
![]() |
| தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல் |

No comments:
Post a Comment