Pages

Thursday, 3 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 106

A good message came from him. It flew from his cunning-less heart. Let us send a reply message so as to kindle the union message flame as gee pouring kindles the fire.
He is a man of hill track where water-falls resembles white branch root growing down in ITRI tree.
This is a poem compiled by KAPILAR

106. குறிஞ்சி

புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று வாழி, தோழி! நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
''தான் மணந்தனையம்'' என விடுகம் தூதே.

தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது
கபிலர் பாடல்

அவன் (காதலன்) இற்றி மர விழுதானது இறங்கும் அருவி போல் தோன்றும் நாடன். அவனிடமிருந்து தூது வந்துள்ளது. அது தீதில்லாத நெஞ்சிலிருந்து வந்த சொல். நாமும் நம் தூதுரையை நல்குவோம். அது எரியும் தீயில் நெய் விட்டது போல இருக்கட்டும். (அதனால் காதல் உறவு நன்கு பற்றிக்கொள்ளட்டும்) 



No comments:

Post a Comment