Hill cultivators offer their millet bunch in plant to their Marriage-God (Murugan). The peacock that eats the millet dances as the dancer (Valli) does in home festive VERI. He (her lover) is a Man of such hill track. He made her to recall him with dropping dews from her eyes.
Refer: Marriage God
This is a poem compiled by NAKKEERAR
105. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
நக்கீரர்
புனவன் = துடவையில் விதைத்துண்டு வாழ்பவன் *
துடவை = மலையில் மரங்களை வெட்டி எரித்து விதைக்கும் நிலம் *
கடி = திருமணம், கடி-உண்-கடவுள் = திருணத்தைக் கூட்டுவிக்கும் முருகக் கடவுள் *
வெறி = முருகனுக்கு எடுக்கும் இல்ல விழா *
சூர் = அச்சம்
கானவன் தன் துடவையில் விளைந்த தினைக்கதிரை முருகக் கடவுளுக்குப் படைப்பான்.. அதனை அறியாமல் உண்ணும் மயில் வெறியேறி ஆடும் வள்ளி போல் (இடுப்பை வளைத்துச் நுழன்று) அழகாக விருப்பம் போல் நடுங்கி ஆடும். இப்படி ஆடும் மலைநாடன் அவன் (அவளது காதலன்). அவனை இப்போது நீர் மலிந்த கண்ணோடு நினைக்கவேண்டியது ஆயிற்று.


No comments:
Post a Comment