Pages

Thursday, 3 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 104

Winter came. Snow balls are crawling as pearls from detached string (image). The sheep is eating the creeping plant in the pot (that she is fostering). She is pondering over her lover. He parts her for several days. – This is her grievances shared with her friend-maid.   
This is a poem compiled by POODANAR of Kaval-mullai village.

104. பாலை

அம்ம வாழி, தோழி! காதலர்,
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!

பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது;

''சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?'' என்ற தோழிக்குக்
கிழத்தி கூறியதூஉம் ஆம்.
காவன்முல்லைப் பூதனார் பாடல்

அம்ம இதைக் கேள் தோழி.
அவர் பிரிந்தார்.
மாலையின் நூல் அறுந்து சிதறும் முத்துமணிகள் போல (படம்) பனி பொழியும் நாள்.
அவர் நினைவால் நான் மெய்ம்மறந்திருக்கும்போது அந்தப் பனியில் நனைந்துகொண்டு தாளியில் வளரும் கொடியை ஆடு மேயும் நாள்.
அவர் பிரிந்திருக்கும் நாள் பல என்ற நிலைமை ஆயிற்று.
(வளர்க்கும் கொடியை ஆடு மேய்வதைப் பார் என்றாள் தோழி. அவர் நினைவிலிருந்து திசைதிருப்புகிறாயா, என்கிறாள் தலைவி)

நூல் அறு முத்தின் தண் சிதர்

No comments:

Post a Comment